சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள், சொந்த நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் திகழவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் அரசாங்கம் முயற்சிகளைத் தொடரும் என்று மனிதவள துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்தார்.
அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு லிட்டில் இந்தியாவின் பர்ச் ரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான வாழ்விடச் சூழலை அமைப்பதற்கான முயற்சிகள் தொடரும் என்று குறிப்பிட்டார்.
Comments