பல சமயத்தினர் ஒன்றுகூடிய வசதி குறைந்த பிள்ளைகளுக் கான நோன்பு துறக்கும் ‘இஃப்தார்’ நிகழ்ச்சி சென்ற புதன்கிழமை நடைபெற்றது.
‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ எனும் இலாப நோக்கமற்ற அமைப்பின் ‘ஷோவிங் கேர் டுகெதர்’ எனும் சமயங்களுக்கு இடையிலான நடவடிக்கை ஏற்பாட்டுப் பிரிவு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு நோன்புப் பெருநாள் நன்கொடையும் விளையாட்டுப் பொருள்களும் அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன. அப்பிள்ளைகள் ‘தி ஆல்ஃபாபெட் புரொஜெக்ட்’ எனும் முழுமையான ஆதரவு திட்டத்தின் புதுப் பயனாளிகள்.
댓글